சென்னை

நேற்று நடிகர் ஏ வி எம் ராஜனின் மனைவியும் பழம்பெரும்  நடிகையுமான புஷ்பலதா மரணம் அடைந்துள்ளர்.

கடந்த 1961-ம் ஆண்டு ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான புஷ்பலதா அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் நடித்து புகழ் பெற்றார்.

மேலும் 1963ஆம் ஆண்டு ‘மெயின் பி லட்கி ஹூன்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்த புஷ்பலதா, ‘நர்ஸ்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

இவர் ‘நானும் ஒரு பெண்’ திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜனுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இதைத் தவிர சிம்லா ஸ்பெஷல், சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் புஷ்பலதா நடித்துள்ளார்.

தற்போது 87 வயதாகும் புஷ்பலதா சென்னையில் வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.

பழம்பெரும்  நடிகை புஷ்பாலதாவின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.