நியூயார்க்

மெரிக்காவின் மூத்த நடிகர் மார்க் மார்கோலிஸ் உடல்நிலை சரி இல்லாமல் மரணம் அடைந்தார்.

கடந்த 1970களில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய நடிகர் மார்க் மார்கோலிஸ் மிகவும் பிரபல நடிகராக விளக்கினார்.  இவருக்கு தற்போது வயது 83 ஆகிறது.  இவர் உடல்நலக் குறைவு  காரணமாக நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி மார்க் மார்கோலிஸ் மரணம் அடைந்ததாக அவர் மகனும் நடிகருமான மோர்கன் மார்கோலிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1970களில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மார்கோலிஸ் அன்றிலிருந்து தற்போது வரை நடித்துவந்தார் பல. திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தாலும், “பிரேக்கிங் பேட்” மற்றும் “பெட்டர் கால் சால்” ஆகிய தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.