
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்ஸஸ் கர்ல்ஸ் போன்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் பிஸியாக வலம் வந்தவர் நடிகர் வெங்கட்.
10 வருடத்திற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பல ஷோக்களில் நம்மை கவர்ந்தவர் வெங்கட். சன் டிவியில் ஒளிப்பரபான பல சீரியல்களில் லீட் ரோல் செய்திருக்கிறார்.
இவரின் அம்மா பிரபலமான மைதிலி பியூட்டி பாலர் நிறுவனர் ஆவார். இவரின் மனைவி நிஷாவும் ஜோடி நம்பர் ஓன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.
இந்நிலையில், சின்னத்திரைக்கு நீண்ட ஆண்டுகள் குட் பய் சொல்லிருந்த வெங்கட் இபோது மீண்டும் புத்தம் புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் இன்று முதல் பகல் 2.30 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ள தொடர், நம்ம வீட்டு பொண்ணு. இந்த சீரியலில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார் நடிகர் வெங்கட்.