
‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார்.
இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிட்டு பின் ‘வெந்து தணிந்தது காடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வந்தார். நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது போஸ்டராக புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]Here is the rustic 2nd Look of @VelsFilmIntl Productions @SilambarasanTR_'s #VendhuThanindhathuKaadu #VTKSecondLook 🔥@menongautham @arrahman @IshariKGanesh @rajeevan69 @jeyamohanwriter @utharamenon5 @siddharthcinema @editoranthony @Kavithamarai @Ashkum19 @kabilanchelliah pic.twitter.com/a1OX5l2wOM
— Vels Film International (@VelsFilmIntl) August 27, 2021