
சென்னை
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் மரணம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முறுகன் கைது செய்யப்பட்டு சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது வேல்முருகன் சென்னை புழல் சிறையில் உண்ணாவிரதப் போரட்டம் மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும், துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்தி அவர் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel