சென்னை:

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த மாவட்டத் தில் மட்டும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் 2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு வரும் 8ந்தேதி முதல் 15ந்தேதி வரை நடைபெறுகிறது.

கலந்தாய்வுக்கான விண்ணப்பம் ஏற்கனவே 21.06.2019 முதல் 28.06.2019 வரை பெறப்பட்டுள் ளநிலையில், 8ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,  தேர்தல் காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு மட்டும்  ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும்,  மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டபடி கலந்தாய்வு நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

கலந்தாய்வு நடைபெறும்  விவரம்:

08.07.2019 (திங்கள் கிழமை) முற்பகல் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள்)

08.07.2019 (திங்கட்கிழமை) பிற்பகல் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – (மாவட்டம் விட்டு மாவட்டம் – அதாவது அலகுவிட்டு அலகு மாறுதல்)

09.07.2019 (செவ்வாய்) முற்பகல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

09.07.2019 (செவ்வாய்) பிற்பகல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

10.07.2019 (புதன்) முற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்

10.07.2019 (புதன்) பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்திற்குள்

11.07.2019 (வியாழன்)முற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- ஒன்றியத்திற்குள்

11.07.2019(வியாழன்) பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

11.07.2019 (வியாழன்) பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்திற்குள்

12.07.2019 (வெள்ளி) முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

12.07.2019 (வெள்ளி) பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

13.07.2019 (சனி) முற்பகல் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு – ஒன்றியத்திற்குள்

13.07.2019(சனி) பிற்பகல் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்தில்

14.07.2019 (ஞாயிறு) முற்பகல் இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – ஒன்றியத்திற்குள்

14.07.2019(ஞாயிறு) பிற்பகல் இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் -வருவாய்‌ மாவட்டத்திற்குள்

15-07-2019 (திங்கள்) முற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு -மாவட்டம் விட்டு மாவட்டம்

15-07-2019 (திங்கள்) முற்பகல் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – மாவட்டம் விட்டு மாவட்டம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.