வேளாங்கண்ணி

க்தர்கள் யாரும் இல்லாமல் வேளாங்கண்ணி மாதா கோவில் தேர்த் திருவிழா நடந்து வருகிறது.

பழைய படம்

தமிழகத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிய முறையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கமாகும். நேற்று 9வது நாள் தேர்ப்பவனி நடைபெற்றது.  ஒளி வீசும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கில் சம்மனை, செபஸ்தியார் சூசையப்பர். அந்தோனியார், ஆரோக்கிய மாதா ஆகிய 5 சொரூபங்களோடு ஆலய உட்பிரகாரத்தில் மட்டுமே சுற்றி வலம் வந்தது.

இந்த வருட விழாவில் கொரானா நோய் பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள், பேராலய ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்ப்பவனி இன்று மாலை நடைபெற உள்ளது.   இதற்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.