திமுக தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்த வேளச்சேரி மணிமாறன். இன்று தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.
ம.தி.மு.க.வின் தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் வேளச்சேரி மணிமாறன்.  சமீப நாட்களாக ம.தி.மு.க. தலைமையுடன் கருத்து வேற்றுமை கொண்டிருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவை விமர்சித்து பத்திரிகைகளில் பேட்டி அளித்தார்.
download (1)
இந்நிலையில்  இன்று அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் சுமார் 50 பேருடன் வந்தார்.  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக் கட்சியில் இணைந்தார். அவருடன் ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்ராஜும்  திமுகவில் இணைந்தார்.
பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய வேளச்சேரி மணிமாறன்,  “வைகோவின் செயல்பாடுகள் சரியில்லை. அவரை நம்பி இனி ம.தி.மு.க.வில் இருக்க முடியாது என்பதால் தாய் கழகமான தி.மு.க.வில் இணைந்தோம்” தெரிவித்தார்.