சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிற சமயத்தில்,  அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தாமல் இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுப்பி உள்ளதுடன், வருகிற 17-ந்தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.

பாஜக நடத்தும் வேல்யாத்திரை காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, வேல்யாத்திரைக்கு தமிழகஅரசு தடை போட்டுள்ளது. உயர்நீதிமன்றமும் வேல்யாத்திரை நடத்த தடை விதித்துள்ளது. ஆனால், பாஜக தடையை மீறி வேல்யாத்திரையை முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே 4 முறை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகஅரசு, இன்று வெளியிட்ட அறிவிப்பில், அரசியல், மத சம்பந்தமான எந்தவொரு கூட்டமும் நடத்த அனுமதியில்லை என்றும்,  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் கூறி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்திதத தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன்,  திட்டமிட்டபடி நவம்பர் 17-ந்தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். வேல் யாத்திரை டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவடையும். இந்த யாத்திரையில், பல தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் யாத்திரையில் கலந்து கொள்ள உள்ளனர். அதனால், வேல்யாத்திரைக்கு  எவ்வளவு தடங்கல் வந்தாலும் திட்டப்படி வேல் யாத்திரை தொடரும் என்று தெரிவித்தார்.

வேல் யாத்திரை மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. கொரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல் யாத்திரை என்றவர், மதம்,  கட்சி கூட்டங்களுக்கு தமிழகஅரசு விதித்துள்ள தடையை  ஏற்றுக்கொள்ள முடியாது என்றவர், வீடுகள், கோவில்களில் உள்ளவர்களை அரசு முன்னெச்சரிக்கை என்ற பெயரில்  கைது செய்வதை ஏற்க முடியாது என்று கண்டனம் தெரிவித்தார்.