சென்னை: நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தக்கூடாது விடுதி நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 425 இடங்களில் வாகன தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
பாதுகாப்பான மற்றும் அமைதியான புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்காக, 1,500 ஊர்க்காவல் படையினருடன் 19,000 காவலர்கள் சென்னை முழுவதும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள், புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளனர். அதன்படி, வண்ண வண்ண வான வேடிக்கைகளும், ஆட்டம் பாட்டமும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை ஈசிஆர் மற்றும் விடுதிகள், மாமல்லபுரம், பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என நட்சத்திர விடுதி மேலாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
முன்னதாக, நட்சத்திர ஓட்டல், விடுதி, பண்ணை வீடுகளின் இயக்குநர்கள், உரிமையாளர்களை அழைத்து காவல்துறை ஆலோசனை நடத்தியது. இதையடுத்துகட்டுப்பாடுகளை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதிக்கக் கூடாது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் கடற்கரை செல்ல, கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
கேளிக்கை நிகழ்ச்சிக்கு வருவோரை ஆதார் உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணம் பெற்றே அனுமதிக்கவேண்டும்.
அறை எடுத்து தங்குவோரின் செல்போன் எண் விடுதி பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்
இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியது.
மேலும், புத்தாண்டையொட்டி, சென்னை கடற்கரைகளில் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விரைவான அவசர மருத்துவ உதவியை உறுதி செய்வதற்காக, மருத்துவக் குழுக்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ்கள் முக்கிய மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன!
அனைத்து பொது மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் பட்டாசு வெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பான மற்றும் அமைதியான புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்காக, 1,500 ஊர்க்காவல் படையினருடன் 19,000 காவலர்கள் சென்னை முழுவதும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
புத்தாண்டையொட்டிபை க் பந்தயம் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 30 இடங்களில் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுப் பாதுகாப்பு மற்றும் சாலை ஒழுக்கம் ஆகியவை எங்களின் முதன்மை முன்னுரிமைகள் ஆகும். நள்ளிரவு மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க 425 இடங்களில் வாகன தணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]