
சென்னை,
வாகன விபத்துகள் காரணமாக நஷ்டஈடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு கீழமை நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், வாகன விபத்து காரணமாக இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும். வழக்கை இழுத்தடித்து நுகர்வோருக்கு மனவலியை ஏற்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வாகன விபத்துகளில் அதிகப்படியான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயித்து, காப்பீட்டு நிறுவனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும், இழப்பீடு கோரும் வழக்குகளை 3 முறைக்கு மேல் ஒத்திவைக்கக் கூடாது என்றும் கூறி உள்ளது.
Patrikai.com official YouTube Channel