சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் தள்ளுவண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் தொடர்பு எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
முடிந்தவர்கள், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பட்டியலை பார்த்து, தொடர்புகொண்டு, வியாபாரிகளிடம் உங்கள் தேவையை கூறி நிறைவேற்றிக்கொள்ளலாம்.
மேலும், அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் விற்பனையாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும் என்று முதன்மைச் செயலாளர்/பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.