ஃபோர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் மற்றும் ஹாப்பி ஜிபி என்டர்மெண்ட் இணைந்து தயாரிக்கும் வீரப்பனின் கஜானா படத்தை அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார்.

‘ராட்சசி’ படத்தின் இயக்குநர் கவுதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள்.

கோபி துரைசாமி ஒளிப்பதிவில் ஞானேஸ்வரன் இசையமைத்துள்ளார். ஃபேன்டஸி படமாக தயாராகி இருக்கும் வீரப்பனின் கஜானா படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

யோகி பாபு முதல் முறையாக யூடியூபர் வேடத்தில் நடிக்கிறார். ‘வீரப்பனின் கஜானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் கதைக்கும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஆனால், படத்தின் தலைப்பு தொடர்பாக படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசிய மறைந்த வீரப்பன் குடும்பத்தார், வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று படக்குழுவினர் ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர்.