
விஷால் தயாரித்து நடிக்கும் ‘விஷால் 31’ படத்தை புதுமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார் . மலையாளத்தின் முக்கிய நடிகர்களில் ஒருவரான பாபுராஜ் இதில் நடித்துள்ளார்.
அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தடைபட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விஷால் 31 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்திற்கு வீரமே வாகை சூடும் என பெயரிடப்பட்டுள்ளதோடு அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியானது.
[youtube-feed feed=1]Here We Go,
Presenting the First Look & Title of #Vishal31 – #VeerameVaagaiSoodum pic.twitter.com/m6R4Q4HOM9
— Vishal (@VishalKOfficial) August 29, 2021