பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார் .

இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் . ஏற்கனவே சோனல் சவுகானை ஒப்பந்தம் செய்திருந்த ரவிக்குமார் தற்போது வேதிகாவை இன்னொரு நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லியாக திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நமீதா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சுதீப் நடிப்பில் முடிஞ்சா இவனை புடி என்ற படத்திற்கு பிறகு தமிழில் படம் இயக்காத கே.எஸ்.ரவிக்குமார், கடந்த ஆண்டு தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ஜெய்சிம்ஹா என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]