தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் உயரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து லண்டனில் வசிக்கும் தமிழர்கள், லண்டனில் உள்ள வேதாந்த குழு தலைவர் அனில் அகர்வாலின் வீடு முன்பு போராட்டம் நடத்தினர். மேலும் உலகம் முழுவதும் ஆங்காங்கே தமிழர்கள் வேதாந்தா குழுமத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழர்களின் போராட்டம் காரணமாக பங்குசந்தையில் வேதாந்தா குழுமத்தின் பங்குகள் பெரும் விழ்ச்சியை சந்தித்து வருகிறது. இது வேதாந்த நிறுவன தலைவர் அனில் அகர்வாலுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடான தி கார்டியன் நாளிதழ் தூத்துக்குடியில் ஸ்டெர்லைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கி சூட்டை, மாஸ் கில்லிங் என்று வர்ணித்துள்ளது. இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமத்தை எதிர்த்து, லண்டனில் வசித்து வரும் அதன் தலைவர் அனில் அகர்வால் வீடு முன்பாக லண்டனில் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், லண்டனில் உள்ள அனில் அகர்வாலின் மகன் மீது தாக்குதல் நடை பெற்றதாக வும், அதன் காரணமாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முகநூலில் செய்திகள் பரவின.
இந்த சம்பவங்கள் காரணமாக வேதாந்தா நிறுவனப் பங்குகள் நேற்றைய மும்பை பங்குச்சந்தையில் 7 சதவீத மும், லண்டன் பங்குச்சந்தையில் 11.52 சதவீதமும் சரிந்தது. அதுபோல இன்று காலை தொடங்கிய பங்குசந்தை வர்த்தகத்தில், தேசிய பங்குச்சந்தையில் 4 சதவீதம் வரையில் சரிந்தது. மேலும் சமுக வலைத்தளம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தக அமைப்புகள் மத்தியில் வேதாந்தா பங்குகளை வாங்க வேண்டாம் என்றும் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
தமிழர்களின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக வேதாந்தா குழு நிர்வாகி அனில் அகா்வால் செய்வதறியாது திகைத்து வருவதாக கூறப்படுகிறது.