.

டில்லி

பாலகோட் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு விருது அளிக்கபடுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர். இது உலகம் எங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கியது. உலக நாடுகளில் பல நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை அதே மாத இறுதியில் பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள்  முகாமிட்டிருந்த பாலகோட் பகுதியில் விமானத் தாக்குதலை  நடத்தியது. இதில் இந்த இயக்கத்தின் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. இந்த விமானப்படை தாக்குதலில் மிராஜ் 2000 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த தாக்குதலை இந்திய  விமானப்படையின் விங் கமாண்டர் அமித் ரஞ்சன், ஸ்குவார்டன் லீடர்கள் ராகுல் பசோயா, பங்கஜ் புஜாடே, பி கே என் ரெட்டி, மற்றும் சஷாங்க் சிங் அக்கியோர் நடத்தி உள்ளனர். இந்த ஐவருக்கும் ராணுவத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான தற்போது வாயு சேனா பதக்கம் நாளை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.