ஆயுள் தண்டனை பெற்ற ஐ பி எஸ் அதிகாரிக்குக் குவிந்த 30000 ராக்கிகள்

Must read

பாலன்பூர்

யுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் டுக்கு 30000 பேர் ராக்கி அனுப்பி உள்ளனர்.


மும்பை ஐஐடி யில் பயின்ற சஞ்சீவ் பட் கடந்த 1988 ஆம் வருடம் குஜராத் மாநிலத்தில் இருந்து ஐ பி எஸ் அதிகாரியாகத் தேர்வானார்.   இவர் குஜராத் மாநில காவல்துறையில் பணி ஆற்றி வந்தார்.   மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் கடும் மதக்கலவரம் ஏற்பட்டது.   இந்த  கலவரத்தில் மோடிக்குப் பங்கு இருந்ததாக சஞ்சீவ் பட் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.   மோடி இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

கடந்த 1990 ஆம் வருடம் ஜாம்நக்ரில் சஞ்சீவ் பட் காவல்துறை  உதவிக் கண்காணிப்பாளராகப் பணி புரிந்து வந்தார்.  அப்போது காவலில் இருந்த ஒருவர மரணம் அடைந்தது குறித்த வழக்கில் சஞ்சீவ் பட் சேர்க்கப்பட்டார்.  அதையொட்டி அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.   கடந்த 2011 ஆம் வருடம் அவர் அனுமதி பெறாமல் பணிக்கு வராதது மற்றும் அரசு வாகனத்தைத் தவறாகப் பயன் படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

தீபிகா

அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போதை  மருந்துகள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட பட் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.    கடந்த 1990 ஆம் ஆண்டு காவலில் இருந்தவர் மரணம் அடைந்த வழக்கில் சென்ற ஜூன் மாதம் அவருக்கு சுமார் 29 ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.   இதற்குப் பல சமூக ஆர்வலர்கள் எதிர்புதெரிவித்து வருகின்றனர்.   கத்துவா பலாத்கார வழக்கை எடுத்து நடத்தும் தீபிகா ராஜவாத் என்னும் பெண் வழக்கறிஞர் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்.


வட இந்தியர்களிடையே ரக்‌ஷா பந்தன் என்னும் பண்டிகை மிகவும் முக்கியமானதாகும். ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் தங்கள் சகோதரர்கள் கையில் ராக்கி என்னும் புனித கயிற்றைக் கட்டுவது வழக்கமாகும்.   இந்த ராக்கி அன்று சஞ்சீவ் பட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெண்கள் அவருக்கு ராக்கியை அனுப்புமாறு தீபிகா வேண்டுதல் விடுத்தார்.  அவருடைய வேண்டுகோளின்படி சுமார் 30000க்கும்  மேற்பட்டோர் ராக்கியை அனுப்பி உள்ளன்ர்.  இன்று சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாலன்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பட் டுக்கு நேரில் சென்று ராக்கி கட்டி உள்ளனர்.

More articles

Latest article