சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கன்னியா குமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வந்தகுமார், கொரோனா குணமடைந்த நிலையில், மற்ற நோய் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.
கடந்த ஆகஸ்டு 10ம் தேதி அன்று தொழிலதிபரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின ருமான வசந்தகுமார் (வயது 70) சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கொரோனா தொற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா குண மடைந்த நிலையில், மற்ற நோய்களின் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.
இந்த நிலையில், அவரது உடல், சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டில், இன்று காலை 5 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து, காலை 10 மணி முதல் 2 மணி வரை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது.
அதன்பிறகு, அவரது உடல், சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு நாளை காலை 10மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.