சென்னை,
ர்தா புயல் வலுவடைந்துள்ளதால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்துகிறது.

இன்று மாலை 3 மணிக்கு புயல் குறித்து, தலைமை செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.
வர்தா புயல் வலுவடைந்தது உள்ளதன் காரணமாக தமிழகத்தில் வடக் கடலோரப் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 450 கிமீ தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டிருப்பதால்  மீனவர்கள், மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 70 கிமீ முதல் 80 கிமீ வரை காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆந்திரா-சென்னை அருகே வர்தா புயல் கரையை கடக்கும் என்றும்,  தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக ஏற்பட இருக்கும் பாதிப்புகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப் பது குறித்து, தமிழக தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள், பேரிடர் மீட்புகுழுவினர் ஆலோசனை குழு கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதிப்ஜான் கூறியுள்ளதாவது:
தற்போது உருவாகியுள்ள வர்தாபுயல் தீவிரமடைந்துள்ளது. இது  சென்னை அருகே கரையை கடக்கும் என்று கூறியுள்ளார். சென்னைக்கு அருகே மகாபலிபுரம், கோவளம் கடற்கரை பகுதியில் கரையை கடக்கலாம் என்றும், இதன் காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், கடற்கரை பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து  நாகை துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.