சென்னை:
வர்தா புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டள்ளார்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை வர்தா புயல் புரட்டி போட்டுள்ளது. ஆயிரகணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது. பல அரசு மற்றும் தனியார் கட்டுமானங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளது. சேதத்தை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்தார். அவர் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பு விபரம்:
நோய் தடுப்புக்கு ரூ. 3 கோடி, நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 25 கோடி, மீனவர்கள் நலனுக்கு ரூ. 10 கோடி, சென்னை மாநகராட்சிக்கு ரூ. 75 கோடி, வண்டலூர் உயிரியல் பூங்கா சீரமைப்புக்கு ரூ. 25 கோடி, மின் வாரியத்துக்கு ரூ. 300 கோடி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ங்களுக்கு ரூ. 10 கோடி என மொத்தம் ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் சீரமைப்பு பணிகள் இனி துரித கதியில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.