சென்னை: வன்னியர்களுக்கு தமிழகஅரசு வழங்கிய 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வித்துறை அமைச்சர் உள்பட உயர் அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும், உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நடப்பாண்டு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அமல்படுத்தலாமா என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து! உயர்நீதிமன்றம் மதுரை தீர்ப்பு..