வாணியம்பாடி

வாணியம்பாடியில் சாலையோர வர்த்தகர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்டதற்கு நகராட்சி ஆணையர் வருத்தம் தெரிவித்து நஷ்ட ஈடு அளித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாட்டுக்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என நாடு பிரிக்கப்பட்டு அதற்கேற்றபடி ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட  முதல் நளில் இருந்தே, காய்கறிக் கடைகள், பழக்கடைகள், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், போன்றவை செயல்பட்டு வருகின்றன.  திருபபட்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சியில் சாலையோ வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்று வந்தனர்.

அங்கு வந்த நகராட்சி ஆணையர் சுசில் தாமஸ் கடைக்காரர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்டுள்ளார்.  வியாபாரிகள் வைத்திருந்த காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை அவர் காலால் எட்டி உதைத்தும் வண்டிகளைத் தள்ளியதும் வீடியோ ஆக்கப்பட்டு பலரும் பகிர்ந்து வைரலானது.  இது தமிழகம் முழுவதையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சுசில் தாமஸ்  தனது தவ்றை உணர்ந்து வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.  அத்துடன் அவர் கீழே உதைத்து தள்ளிவிட்ட பழங்களுக்கான நஷ்டஈட்டையும் வழங்கி உள்ளார்    அத்துடன் வர்த்தகர்கள் நகராட்சி விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.