வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டு லாக்டவுன் நேரத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள்.

தன்னை விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனிடையே பீட்டர் பால் வனிதாவின் பெயரையும் வனிதா பீட்டர் பாலின் பெயரையும் டாட்டூ குத்திக் கொண்டார்கள்.

சில காலம் மட்டும் மகிழ்ச்சியாய் வாழ்ந்த இவர்கள் அதன் பின் கருத்து வேறுபாடால் பிரிந்தனர். தான் குத்தியிருந்த பீட்டர் பாலின் பெயரில் உள்ள டாட்டூவை தற்போது நீக்கி அதிரடி காட்டி உள்ளார் வனிதா. அதை வேறு சிம்பிளாக மாற்றிய வனிதா அதற்கு ஒரு அர்த்தம் இருப்பதாகவும், அது ‘டபுள் ஹேப்பினஸ்’ என்பது என்றும் தனது யூடியூபில் பதிவிட்டுள்ளார்.