இரு தினங்களுக்கு முன்பு தான் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் .

இத்திருமணத்தை அடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், முறையாக விவாகரத்து பெறாமல் இந்த திருமணம் நடந்துள்ளது என போலீசில் புகார் அளித்தார் .

இந்த செய்தியை அறிந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

படிப்பும் அனுபவமும் கொண்டவர்கள் எப்படி இந்த தவறைச் செய்ய முடியும். வனிதா – பீட்டர் பால் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை. திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை? என்று தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பதிவில், வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என்று நினைத்தேன். ஆனால் இந்த பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

இதற்கு வனிதா விஜயகுமார்,உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

வனிதாவின் பதில்களுக்கு பின்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் முறைப்படி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணங்களைக் குறித்த எனது கருத்தை பதிவிட்டேன். வனிதா திருமணத்தை பற்றி பேசிக்கொள்வதை நிறுத்திக் கொள்வோமா? என முடித்து கொண்டார் .