டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 75 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும அதிவேக வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தி வருத் மோடி அரசு, 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையான அதிவேக வந்தேபாரத் ரயிலான நமோ பாரத் ரயில் சேவையை நேற்று (அக்டோபர் 20ந்தேதி) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்,  மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, நம் நாட்டின் இரயில் சேவையை வலுப்படுத்தவும், ரயில் பயணத்தை எளிமையாக்கவும் மத்திய அரசு ‘வந்தே பாரத்’ என்கிற அதிவேக இரயிலை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

கடந்த 2019 பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தனது சோதனை ஓட்டத்தைத் தொடங்கிய வந்தே பாரத் இரயில், பிப்ரவரி 17-ம் தேதி தனது வர்த்தக ரீதியான பயணத்தைத் தொடங்கியது. முதல் ரயில் சேவையை டெல்லியிலிருந்து வாரணாசிக்குச் சென்ற இந்த வந்தே பாரத் இரயிலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் என்றவர்,  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 “இந்த நிதியாண்டிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்படலாம்.  இந்த இரயில் ஜம்மு-ஸ்ரீநகர் இடையே இயக்கப்படும். அதேபோல, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 75 வந்தே பாரத் இரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.