டில்லி
வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் 16 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகின் பல நாடுகளிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் இருந்து வெளி நாடு சென்றோர் மீண்டும் இந்தியாவுக்கு வர இயலாத நிலை ஏற்பட்டதால் மிகவும் துயர் அடைந்தனர். இதையொட்டி இந்தியா வந்தே பாரத் மிஷன் என்னும் திட்டத்தைத் தொடங்கியது.
இந்த திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானம் மூலம் 12 நாடுகளில் உள்ள சுமார் 15000 பேர் அழைத்து வர திட்டமிடப்பட்டது. கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய இந்த திட்டம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளில் உள்ள துபாய், அபுதாபி, கத்தார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மாலத்தீவில் இருந்தும் இந்தியர்கள் திரும்பி வந்துக் கொண்டு இருக்கின்றனர்
இந்நிலையில் வந்தே பாரத் மிஷன் இரண்டாம் கட்டம் வரும் 17 தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்டத்தில் 49 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் 31 வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.