டில்லி

யிலில் பயணம் செய்யும் பயணிகளில் மொபைல் போனில் ஆரோக்ய சேது செயலி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இதுவரை இரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயங்கத் தொடங்கி உள்ளன.   இந்த சிறப்பு ரயில்கள்  டில்லியில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.  இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

இந்நிலையில் இன்று அதிகாலை 12.24 மணிக்கு இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள டிவிட்டர் அறிவிப்பில் ரயிலில் பயணம் செய்வோர் அனைவரது மொபைல் போனிலும் ஆரோக்ய சேது செயலி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.   இது குறித்து ஏற்கனவே அறிவிக்காத நிலையில் தற்போது ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே செய்தி தொடர்பாளர் பாஜ்பாய், “சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்வோர் அலைப்பேசியில் அவசியம் வைத்திருக்க வேண்டும்.  எனவே அந்த மொபைல் போனில் ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்த பிறகு ரயில் நிலையத்துக்கு வர வேண்டும்.  மக்களின் நன்மைக்காக இதை அரசு கட்டாயமாகி உள்ளது.  மொபைல் எடுத்து வராத பயணிகள் குறித்து அந்த நேரத்துக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆரோக்ய சேது செயலி வெளிமாநில தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் கட்டாயம் ஆக்கப்படவில்லை.   இந்த செயலி மூலம் குறிப்பிட்ட பயணிக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது தெரிய வருவதோடு அவரவர் உடல்நிலை மற்றும் முந்தைய பயண விவரங்களுக்கு ஏற்ப நிற அடையாளம் வழஙக்படும்.  எனவே இதன் மூலம் ஒரு பயணி அருகில் உள்ளோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தெரிந்துக் கொள்ள முடியும்.

மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போது அனைத்து பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன   ஊரடங்குக்குப் பிறகு விமானச் சேவை தொடங்கும் போது பயணிகளுக்கு ஆரோக்ய சேது செயலி கட்டாயமாக்க உத்தேசித்துள்ளதாக பயணிகள் விமானத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.    மேலும் இந்த செயலி மூலம் கொரோனா தொற்று குறித்து பச்சை வண்ணம் இல்லாதவர்கள் கண்டறியப்பட்டு விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்த அதிகாரி கூறி உள்ளார்.