வண்டலூர்
வண்டலூர் உயிரியல் பூங்கா வார விடுமுறை நாளான 31 ஆம் தேதி திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகில் உள்ள வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனைப் பார்த்து செல்கின்றனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.,
வருகிற செவ்வாய்கிழமை (31-ந்தேதி) புத்தாண்டுக்கு முந்தைய தினம் என்பதாலும், அரையாண்டு விடுமுறை என்பதாலும், பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக வருகிற செவ்வாய்க்கிழமை திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.