நடிகர் அரவிந்த் சுவாமி நடிப்பில் நரகாசுரன் மற்றும் தலைவி ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
அதை தொடர்ந்து இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் தயாராகியுள்ள வணங்காமுடி திரைப்படத்தில் அரவிந்த்சுவாமி கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் M.R.கணேஷ் தயாரிப்பில், நடிகர் அரவிந்த் சுவாமி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வணங்காமுடி திரைப்படத்தில் சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் வணங்காமுடி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் இந்த டீசரை வெளியிட்டுள்ளார்.