பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

 

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் சுவரில் துளைப்போட்டு, 13 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் உள்ளிட்டவை சமீபத்தில் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் அவர்களுக்கு தொடர்பு இருப்பது சில நாட்களுக்கு முன்பு தெரியவந்தது.

இந்நிலையில்,பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவங்களுக்கு, கொள்ளையர்கள் பயன்படுத்திய வேன் ஒன்று தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் கணேசன் அடையாளம் காட்டிய வேனை, ஆய்வாளர் மதன் தலைமையிலான காவலர்கள் பறிமுதல் செய்தனர். சுற்றுலா வாகனம் போன்ற ஹைடெக் வேனை பயன்படுத்தி அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து ஓட்டுநர் கணேசனை சமயநல்லூர் மற்றும் வாடிப்பட்டிக்கு அழைத்துச் சென்று விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.