
சூப்பர் ஹிட் தெலுங்கு படமான RX100 மூலம் புகழ் பெற்ற கார்த்திகேயா கும்மகொண்டா, வலிமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இவரும், லோஹிதா ரெட்டி என்பவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது, இரு வீட்டார் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு என்.ஐ.டி. வாரங்கல்லில் கார்த்திகேயாவும், லோஹிதாவும் முதல் முறையாக சந்தித்திருக்கிறார்கள். தற்போது பெஸ்ட் ஃப்ரெண்ட், லைஃப் பார்ட்னராகியிருக்கிறார் என புகைப்படங்களை பதிவிட்டு ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் கார்த்திகேயா.
Patrikai.com official YouTube Channel