நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அவர்களின் முகநூல் பதிவு:
ஜாக்ரன் என்ற இந்தி பத்திரிகை சற்றுப் பிரபலமானது. பல மாநிலங்களில் இருந்தும் வெளி வருகிறது. அதன் 27-10-16 இதழில் உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றி ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ரகசியாமாக வைத்திருந்து அறிவிப்பதற்கு சுமார் பத்து நாள் முன்பே ஜாக்ரன் பகிரங்கப்படுத்தி உள்ளது.
செய்திக்கு மறுப்புத் தெரிவிக்க உயர் வட்டம் பிரஷர் தந்தும் அப் பத்திரிகை அடிபணியவில்லை.
புதிய 2000 ரூ நோட்டு வருகிறது என்றும் 500, 1000 நோட்டு ஒழிக்கப்பட உள்ளது என்றும் ஜாக்ரன் கட்டம் கட்டிச் செய்தி வெளியிட்டுள்ளது.
இது எப்படி என்பதை சர்ஜிகல் ஸ்டிரைக்காளர்கள் சொல்ல வேண்டும்.
காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சில்
பிறந்தபத் திரிகைப் பெண்ணே
அறைதனில் நடந்தவற்றை
அம்பலத்தில் இழுத்துப் போட்டு
கறையுளம் தூய்மை செய்வாய்
நிறை பொருள் ஆவாய் ஏழை
நீட்டிய வெறும் கரத்தே.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பத்திரிகைகளுக்கு வகுத்த இலக்கணத்தைச் செயலில் கட்டிய ஒரே பத்திரிகை ஜாக்ரன் தானோ?