சேலம்:
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதியை சேலம் பல்கலை நிர்வாகம் பல்கலைக்கழகத்திலிருந்து இடை நீக்கம் செய்துள்ளது.
கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்தார், இதழியல் மாணவி வளர்மதி. இவர் நக்சலைட் இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறார் என்று புகார் பதிந்து கைது செய்தது காவல்துறை. சேலம் சிறையில் அடைக்கப்பட்ட வளர்மதி மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதையடுத்து அவர் ர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின், வைகோ, சீமான், வேல்முருகன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் எண்ணற்றோர் சமூகவலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். . இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் படித்துவந்த வளர்மதியை பல்கலை நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.