நெட்டிசன்:
சுரேஷ்பாபு தாயகம் (Suresh Babu Thayagam) அவர்களின்   முகநூல் பதிவு:
டகங்கள் மீண்டும் ஒரு கேவலமான புனைக்கதையை தீட்டி பரவி விட்டிருக்கின்றன.
வைகோ க்ளீன் இமேஜ் உள்ள தலைவர் அதனால், நெடுமாறன் போன்றவர்கள் மூலமாக சசிகலா நடராஜன் ஏற்பாட்டில் வைகோவை முதல்வராக்கும் பேச்சும் நடப்பதாகவும், இதற்கு வைகோ ஒப்புகொள்வாரா என யோசிப்பதாகவும் சில ஊடகங்கள் கற்பனை குதிரையை ஓடவிட்டுள்ளன.
ஊடகங்களே, உங்கள் சிந்தனை (ச)தீயில் நான் தீ வைக்க விரும்புகிறேன்.
vaiko
அதிமுக முழு மெஜாரிட்டியுடன் இருக்கும் ஆட்சியிலிருக்கும் கட்சி. அதன் தலைமை உடல்நலம் குன்றியிருப்பதால் அதனை சார்ந்த பொருப்புகளுக்கு யார் நியமிக்கப்படவேண்டும் என்பது அவர்கள் உரிமை. அதற்கான கடமை அவர்களுக்கானது. மாறாக ஊடகங்களின் கற்பனை மைகளுக்கு சொந்தமானதல்ல. அதோடு அதிமுக என்கிற இயக்கம் அடுத்தவரை அதிலும் மாற்றுக்கட்சி தலைவரை அவர்களின் ஆட்சிக்கு தலைமை பொறுப்பேற்க அழைக்கும் அளவிற்க்கு பக்குவமோ, கர்ணகுணமோ கொண்ட இயக்கமும் அல்ல. இது அதிமுக மட்டும் அல்ல வேறு எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும், மதிமுக உட்பட.
தாங்கள் உடல்வருத்தி, முதல்போட்டு வென்றெடுத்த ஆட்சியை வேறொருவருக்கு அள்ளி முடிந்து தரவோ, ஜடாமுனியின் வரம் அள்ளி தரும் குணம் கொண்ட அரசியல் இயக்கங்களோ இந்த மண்ணில் இதுவரை இருந்ததில்லை என்பதை விட இப்போது நிச்சயமாக இல்லை என்பதே மட்டும் உண்மை.
மேலும், எம்.நடராஜன் யார் என்பது எமக்கும், அதிகாரம் கைகளிலிருந்தால் வைகோவின் முன்னெடுப்புகள் எப்படியிருக்கும் என்பது எம்.நடராஜனுக்கும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இந்த ஊடக கற்பனை செய்திகளில் இன்னொரு முரண்,
இவர்கள் சாட்சிக்கு அழைத்திருக்கும் ஐயா நெடுமாறன்!!!
தமிழீழம் சார்ந்த விசயங்களில் அவரோடு நாங்கள் ஒத்து போனாலும் சமீப காலமாக ஜயா, எங்கள் மீது கொண்டுள்ள அடிப்படையற்ற, அர்த்தமற்ற காழ்ப்புணர்வை நாங்கள் அறியாமலில்லை. அதற்கு சாட்சியமாம் நிற்கிறது சங்கரன்கோவில் இடைத்தேர்தல். வைகோவின் கிராமத்திலேயே எங்களுக்கு எதிராக நெடுமாறன் வாக்கு கேட்ட நிகழ்வை மறக்கமுடியுமா? இவர், வைகோ முதல்வராக யோசனை தருவார் என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.
இதற்கும் மேலாக, 2006_முதல் ஆறு ஆண்டுகள் அதிமுக கூட்டணியில் இருந்த போதும் இதே வைகோ க்ளீன் இமேஜ் தலைவர் தான். அன்று வெறும் சில பல இடங்களுக்காக அதிமுக எங்களை தேர்தல் ரீதியாக கழுத்தறுத்ததை நாங்கள் மறப்பதற்கில்லை. அவர்களின் அத்தகைய செயல் நாங்கள் கண்ட நிஜம்.
ஊடகங்கள் எழுதும் இந்த செய்திகளோ அவர்களின் விருப்பத்தால் எழுந்த கற்பனை.
கற்பனையில் களித்து மகிழ்வதை விட,
கடந்து சென்ற நிஜத்தை பாடமாக நினைவில் வைப்பதே நலம் என நான் அழுத்தமாக நினைக்கிறேன். இந்த கற்பனை செய்தியை பொதுவானவர்களோ, அல்லது எங்களில் சிலரோ ஆர்வமிகுதியால் தூக்கி திரிந்து பின்பு ஏமாந்து விடகூடாது என்பதே என் உள்வருத்தம். அதற்காக தான் இந்த பதிவு.
முடிவாக, ஆனால் திடமாக ஒரு செய்தி……,
புறவாசல் நுழைவை வைகோ_வோ, மதிமுக_வோ எந்நாளும் விரும்பியதில்லை.., இனியும் விரும்பாது.
(குறிப்பு; ஊடகங்களின் இத்தகைய கற்பனைகளுக்கு அவசியமில்லாதபடி முதல்வர் விரைவில் நலம் பெற்று வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்).