ஜெ.. என் ஒருதலை காதலி! அவரை எதிர்ப்பவர்கள் குரங்குகள்!: எல்லை மீறி கட்ஜூ!

Must read

நெட்டிசன்:
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதாவை தான் ஒருதலையாக காதலித்ததாகவும்,  ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் குங்குகள் என்றும் தெரிவித்திருப்பது பல்வேறு மட்டத்தில் எதிர்ப்பலையை உருவாக்கியிருக்கிறது.

கட்ஜூ - ஜெயலலிதா
கட்ஜூ – ஜெயலலிதா

கட்ஜூ, தனது பேஸ்புக் பக்கத்தில்,  ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெறவேண்டும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஜெயலலிதா எனும் பெண் சிங்கத்திற்கு எதிராக திரளும்  ‘லங்கூர்’ வகை குரங்குகள் போல்  எதிரிகள்  இருக்கிறார்கள். ஆனாலும், வெகு விரைவில் அவர் குணமடைந்து தனது அன்றாட பணிகளுக்கு திரும்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ள கட்ஜூ,  தனது மலரும் நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.
“நான் இளைஞனாக இருந்தபோது, ஜெயலலிதா மிக இளம் பெண்ணாக இருந்தார் ஜெயலலிதா.  அவர் மிகவும் கவர்ந்திழுக்க கூடிய வகையில் இருந்ததால் அவர் மீது பெரும் ஈர்ப்பு எனக்கு
kk
இருந்தது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அது ஒரு தலை காதலாகும்.  இன்றும் அவர் கவரக்கூடிய சக்தியுடன் உள்ளார். அவர் மீதான ஈர்ப்பு இன்றும் உள்ளது. அவர் விரைவில் குணமடைய மீண்டும் வாழ்த்துக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் கட்ஜூ.
ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரது எதிரிகள் குரங்குகள் என்றும் கட்ஜூ தெரிவித்துள்ளது பல தரப்பில் இருந்து விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
முன்னாள் நீதிபதியான கட்ஜூ, தனது தரத்தை தாழ்த்தும் விதமாக பொதுவெளியில் எழுதியிருப்பது தவறு என்று கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

More articles

Latest article