சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில், இனி  ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வைகை அதிவேக விரைவுரயில்,  மதுரை, சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இது மதுரையில் இருந்து புறப்பட்டு  திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படுகிறது.

இந்த ரயில்6 இயக்கப்படும் மொத்த தூரம்,  496 கி. மீட்டர். இந்த  தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது. இதனால் இந்த ரயிலுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதே வேளையில், பூலோகவைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் இந்த ரயில் நிற்காமல் செல்வதால், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல விரும்பும் பயணிகள் திருச்சியில் இறங்கி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருகிறது. இதனால்,  , ஸ்ரீரங்கம் மக்கள் உள்பட பல பொதுமக்கள், வைகை அதிவிரைவு ரயிலை ஸ்ரீரங்கத்தில் நின்றுசெல்ல அறிவுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், பொதுமக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று, வைகை ரயில் இனிமேல் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்  தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

செப்டம்பர் 16ஆம் தேதி முதல் வைகை அதிவிரைவு ரயில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்.

மலைக்கோட்டை விரைவு ரயில் கல்லக்குடி பழங்காநாத்தம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மன்னார்குடி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மயிலாடுதுறை – மைசூரு விரைவு ரயில் புகழுர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.