சென்னை
இன்று முதல் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அனைத்து போட்டிகளுக்கும் டிக்கட் விற்பனை தொடங்குகிறது.
அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேத் இ வரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.
கடந்த மாத இறுதியில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களில் நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த டிக்கட்டுகள் ‘புக் மை ஷோ’ இணையதளம் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடங்கிய சிறிது நேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
இன்று அனைத்து உலகக்கோப்பை போட்டிகளுக்குமான பொது டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து போட்டிகளுக்கும் மொத்தமாக சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.