மதுரை: பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி யில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்தார்.

மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று காலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுகளை திறந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
அதன்படி முதல்கட்டமாக வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து, 120 நாட்களுக்கு 6,739 மி.ககனஅடி க்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த அணை திறப்பின் மூலம் திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் 45,041 ஏக்கல் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel