சென்னை:  தமிழக்ததில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளை அழைத்து வர உதவும் வகையில்,  118 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக ஆம்புலன்ஸூக்குள் ஏறி அதன் செயல்பாட்டினை  முதல்வர் பார்வையிட்டார். அவருடன், தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று, ஆம்புலன்சில் உள்ள வசதிகள் குறித்து விளக்கினார். பின்னர் பச்சைக்கொடி காட்டி, ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே சென்னையில் 1005 அவசர கால ஊர்திகள்இயங்கி வரும் நிலையில், இன்று  கூடுதலாக 118 ஆம்புலன்ஸ்கள் கொரோனா சேவைக்காக புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ளன.

முதல்கட்டமாக இந்த ஆம்புலன்ஸ்கள், கொரோனா நோயாளிகளின் தேவைக்காக பயன்படுத்தப் படும் என்றும், கொரோனா தொற்று குறைந்த பின் பொதுவான மருத்துவ சேவைக்கு பயன்படுத்தப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.