வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. தொடக்கத்திலிருந்தே பல இடையூறுகளை சந்தித்து வந்தது .
இதனிடயே வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வேண்டும், மாதத்தில் 15 நாட்களில் படப்பிடிப்பு என பல்வேறு கண்டிஷன்களைச் சிம்பு வைப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்படத்திலிருந்து சிம்புவை நீக்குவதாக .
இதனையடுத்து வெங்கட் பிரபு இணைய தொடர் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஹாட் ஸ்டார் தளத்துக்காக வெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் வைபவ் மற்றும் காஜல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் வைபவ் உறுதிப்படுத்தியுள்ளார்.