டோதரா

குஜராத் மாநிலம் வடோதரா அருகில் ஒரு விடுதியின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 7 பேர் விஷவாயு தாக்கி மரணம் அடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் வடோதரா நகரில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்தில் பார்டிகுய் என்னும் சிற்றூரில் தர்ஷன் ஓட்டல் என்னும் விடுதி உள்ளது. இதன் உரிகையாளர் பெயர் ஹாசன் அப்பாஸ் இஸ்மாயில் போரானியா ஆகும். இந்த விடுதியின் கழிவு நீர் தொட்டி நிரம்பியதால் இதை சுத்தம் செய்ய அருகில் உள்ள துவாவி என்னும் சிற்றூரில் இருந்து 4 பேரும் விடுதி பணியாளர்கள் மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொட்டியில் முதலில் ஒருவர் இறங்கி சுத்தம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் விஷ வாயு தாக்கியதால் அவர் வெளியே வரவில்லை. அதனால் பதறிய மற்ற ஆறு பேரும் தொட்டியில் இறங்கி உள்ளனர். அப்போது விஷ வாயு தாக்கி அனைவரும் மரணம் அடைந்துள்ளனர். உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு அவர்களை சடலமாக மீட்டுள்ளனர்.

ஏழு பேரின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளது. கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வோருக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படாததால் அவர்கள் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விடுதியின் உரிமையாளர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.