இம்சை அரசன் 24ம் புலிகேசி ஏற்படுத்திய சர்ச்சையில் இருந்து மீண்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு, சூரஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

ரெட் கார்ட் போட்டு வைகை புயலின் நடிப்புக்கு தடை போடப்பட்ட நிலையில் தடை நீங்கி இப்போது மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார் நடிகர் வடிவேலு.

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’-சை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலினுடன், பகத் பாசிலும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இது குறித்த முறையான அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel