சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நடிகர் வடிவேலு முதலமச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனா கட்டுப்படுத்தி உள்ளார். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நிலவுவதாகவும் கூறி பாராட்டிப் பேசினார்.

மேலும் நான் அரசியல் பேசவில்லை. ராம்நாடுனு ஒன்னு இருக்கு, ஒரத்தநாடுனு ஒன்னு இருக்கு, இப்படி நிறைய இருக்கு. கொங்குநாடு. பல நாடு. இப்படியே பிரிச்சோம்னா அவ்வளவு தான். அதெல்லாம் பிரிக்க முடியுமா? நல்லா இருக்கிற தமிழ்நாட ஏன் பிரிச்சுக்கிட்டு? இதை கேட்கும்போது தலை சுத்துது விட்டுடுங்க என்று கூறினார் வடிவேலு.

சமீபத்தில் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் கொங்கு மண்டலத்தை, கொங்கு நாடு என தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]