புதுடெல்லி: மத்திய மோடி அரசால், பிரமாண்ட தடுப்பூசி போடும் நிகழ்வான ‘டிகா உத்சவ்’ போன்றவை நடத்தப்பட்டாலும், இந்தியாவில், ஏப்ரல் தொடக்க காலத்தோடு ஒப்பிடுகையில், தற்போது செலுத்தப்படும் விகிதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசால், ஏப்ரல் 11 முதல் 14ம் தேதிவரை, ‘டிகா உதசவ்’ என்ற பெயரில் பிரமாண்ட தடுப்பூசி திருவிழா அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், நாட்டின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை பெரியளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதர்பார்ப்பிற்கு மாறாக, தடுப்பூசி எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கையானது, ஏப்ரல் துவக்க காலத்தோடு ஒப்பிடுகையில், ஏப்ரல் இறுதிகாலத்தில் குறைந்துள்ளது.
ஏப்ரல் துவக்கத்தில், தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 26 மில்லியன் என்பதாக இருந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 18 மில்லியன் என்பதாக குறைந்துள்ளது.