தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 5

– சங்கர் வேணுகோபால்

சென்ற பதிவுகளில் தடுப்பூசி அன்பளிப்பு என்ற பெயரில் நடந்த முறைக்கேட்டை  பார்த்தோம் .  தொடர்ந்து இந்த பதிவில் தடுப்பூசி வர்த்தகத்தில் நடந்திருக்கும் முறைகேடுகளை சற்று விரிவாக பாப்போம்

கடந்த சில நாட்களாக பிரேசில் நாட்டின் அதிபர் போல்சொனரோ, இந்திய நாட்டின் Bharat Biotech நிறுவனத்தின் Covaxin தடுப்பூசி வாங்கியதில் நடந்த ஊழல்  குறித்து பிரேசில் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுக்கும் நிலையில், இந்த தடுப்பூசி வாங்கியதில் Singapore நாட்டின் நிறுவனத்திற்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டார் இதை தொடர்ந்து அவர் பதவி விலக அழுத்தம் அதிகரித்துள்ளது

January 2021 மோடியுடன் நேரிடையாக தொலைப்பேசியில் பேசி இந்த Covaxin வர்த்தகத்தை உறுதி செய்ததாக இரு நாட்டு தலைவர்களும் அன்றைய செய்திக்குறிப்புகளில் விளம்பரப்படுதிக்கொண்ட நிலையில் இன்றைய பிரேசில் ஊழல் தடுப்பு குழுவின் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது

ஆனால் நம் நாட்டின் தொலைகாட்சி ஊடகங்கள் எதுவும் இது குறித்து பேசாமல் மக்களை திசை திருப்பும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கியிருக்கின்றன

வர்த்தகம் என்ற பெயரில் நடந்திருக்கும் முறைக்கேட்டை ஆழ்ந்து பார்க்கும்

போது இது திட்டமிட்ட ஒரு சதி செயல் போலவே தெரிகிறது

Covax பங்கீட்டில் Serum ஒப்புக்கொண்ட தடுப்பூசி அளவினை வழங்கவில்லை என்று நாம் பார்த்தோம்

இப்படி ஒப்பந்த அளவை காட்டிலும் குறைவாக வழங்கிய பல நாடுகளுக்கு ஒப்பந்தத்திற்கு வெளியே வர்த்தகம்  செய்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது

உதாரணமாக நமது அண்டை நாடான Bangladesh Covax-AMC பங்கீட்டின் மூலம் 10,908,000 ( 1 கோடியே 9 0  லட்சத்தி 800 தடுப்பூசிகளுக்கு ஆணை வழங்கியது)

ஆனால் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சக இணைய பக்கங்களில் Covax பங்கீடு குறித்து எதுவும் பேசாதது சந்தேகத்தை எழுப்புகிறது

AZ-GAVI மூலம் ஒப்பந்த ஆணை பெற்ற பிறகு ஏன் இந்திய அரசு அந்த நாட்டிற்கு

33 லட்சம் தடுப்பூசிகளை இலவசமாகவும் வர்தகமாகவும்  வழங்கியது?

Serum நிறுவனத்திடம் இருந்து என்ன விலை குடுத்து வாங்கியது இந்திய அரசு?

1 கோடி தடுப்பூசிகளுக்கு AMC மூலம் $3 அமெரிக்க டாலருக்கு மிகாமல் வழங்குவேன் என்று உறுதிமொழி தந்து அதற்க்குண்டான முதலீட்டையும் AZ GAVI மூலம் பெற்றுக்கொண்ட Serum ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய தொகுப்பினை ஏன் இலவசம் என்ற பெயரில் ஒன்றிய அரசு வழங்க வேண்டும்?

இந்த இலவச தொகுப்பிற்கு Serum நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணம் எவ்வளவு?

இந்த முறைகேடு பல நாடுகளுக்கு நடந்திருக்கிறது   அதில் சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்

 

  • Myanmar நாட்டிற்கு GAVI-AMC பங்கீடு 36 லட்சம் என்றிருக்க அந்த COVAX விநியோகத்தில் ஒரேயொரு தடுப்பூசியும் வழங்காமல் 20 லட்சம் தடுப்பூசிகளை வர்த்தக ரீதியில் வியாபாரம் செய்தது எந்தவகை சாதுர்யம் என்றோ தொற்று மேலாண்மை என்றோ விளங்கவில்லை
  • மற்றொரு அண்டை நாடான Nepal ( நமது அகண்ட பாரதம் கனவில் முதல் நிறுத்தமாக இருக்கும் ஒரு இந்து ராஷ்டிரா நாடு ), GAVI-AMC தொகுப்பில் 1,920,000

தடுப்பூசிகள் கேட்டிருக்கும் நிலையில் , இந்தியா 348,000 தடுப்பூசிகளை Covax தொகுப்பில் வழங்கிவிட்டு 1,000,000 தடுப்பூசிகளை வர்த்தக ரீதியில் வியாபாரம் செய்திருப்பது தெரிய வருகிறது

  • அடுத்ததாக Srilanka குறித்து பார்ப்போம் இந்திய இலங்கை நட்புறவு கானல்நீர் போல் இருக்க , இந்தியா ஒரு தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக பல நட்பு பாலங்களை உடைத்து எறிந்திருக்கிறது என்பது விளங்கும்

GAVI-AMC தொகுப்பின் மூலம் Srilanka 1,440,000 தடுப்பூசிகளுக்கு ஆணை வழங்கியிருக்கும் நிலையில் 264,000 தடுப்பூசிகளை மட்டுமே COVAX தொகுப்பில் வழங்கிவிட்டு 500,000 தடுப்பூசிகளை வர்த்தகம் செய்திருப்பது எத்தகைய சாதுர்யம் என்று தெரியவில்லை

  • ஐ.நா பாதுகாப்பு குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக வெளிப்படையாக ஆதரவு தந்த Maldives நாட்டிற்கும் இதே நிலை தான் Maldives GAVI-AMC தொகுப்பில் 108,000 தடுப்பூசிகள் கேட்டிருக்கும் நிலையில் 12,000 தடுப்பூசிகளை மட்டுமே COVAX தொகுப்பில் வழங்கி விட்டு 100,000 தடுப்பூசிகளை வர்த்தகம் செய்திருக்கிறது ஒன்றிய அரசு
  • ஆப்ரிக்க நாடான Ghana 2,052,000 தடுப்பூசிகளை GAVI-AMC தொகுப்பில் கேட்டிருக்கும் நிலையில் 600,000 தடுப்பூசிகளை மட்டுமே COVAX பங்கீட்டில் வழங்கியிருக்கிறது Serum நிறுவனம் அந்த Ghana நாட்டிற்கு 2,000 தடுப்பூசிகளை வர்த்தகம் செய்திருப்பது புரியாத புதிராகவே இருக்கிறது

600,000 தடுப்பூசிகளை பெற்ற Ghana மிச்சம் 1,400,000 தடுப்பூசிகளை கேட்டுப்பெறாமல் சொற்ப அளவு  2,000 தடுப்பூசிகளை ஏன் வர்த்தக விலையில் வாங்கியது என்பது எந்த அடிப்படையில் என்று விளங்கவில்லை

இப்படி நமது அண்டை / நட்பு நாடுகள் அனைவருக்கும் அவர்கள் ஒப்பந்தப்படி ஆணைப்பிறப்பித்த தடுப்பூசி தொகுப்பினை COVAX பங்கீட்டில் வழங்காமல் அதற்க்கு மாறாக வர்த்தக ரீதியில் வியாபாரம் செய்திருப்பது எந்த வகையில் நம் அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது என்பது வியப்பாக இருக்கிறது

இப்படி Baniya என்று அழைக்கப்படும் வர்த்தக ரீதியில் நடந்துக்கொள்ளும் ஒரு அரசு எப்படி தெற்காசியாவில் தன்னை ஒரு வல்லரசாக நிலைநிறுத்திக்கொள்ள முடியும் எப்படி China ஆதிக்கத்தை எதிர்க்க முடியும் என்பதை மோடி தான் விளக்க வேண்டும்

இது போன்ற பல நாடுகள் சமீப காலங்களில் China பக்கம் தங்கள் நட்பு கரங்களை நீட்டியிருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே

GAVI-AMC ஒப்பந்தத்திற்கு வெளியே Serum நிறுவனம் எப்படி வர்த்தகம் செய்தது? இந்த முறைக்கேடு ஏன் ஒன்றிய அரசால் முறைப்படுத்தப்படவில்லை ?

20 க்கும் மேற்ப்பட்ட வர்த்தக விநியோகம் நடக்க யார் காரணம்? மொத்தம் 25,165,000 தடுப்பூசிகள் GAVI-AMC பங்கீட்டில் உற்பத்தி ஆணை Serum நிறுவனத்திற்கு வழங்கப்படாத நிலையில் எப்படி அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி நடந்தது?

மோடி அரசாங்கம் இது குறித்து Serum நிறுவனத்திடம் கேள்வி கேட்டதா? கேள்வி கேட்டிருந்தால் ஏன் அந்த தவறை திருதிக்கொள்ளவில்லை Serum நிறுவனம் ?

இப்படி முறைக்கேடு நடத்திய நிறுவனத்திற்கு ஏன் 3000  கோடி மக்கள் வரிப்பணம் மானியமாக வழங்கப்பட்டது?

இந்த வர்த்தகத்தில் வேடிக்கை என்னவென்றால் UN Health Workers ஐ.நா சுகாதாரத்துறை தொழிலாளர்களுக்கு கூட வர்த்தக விலையில் தான் இந்திய ஒன்றிய அரசு தடுப்பூசிகள் வழங்கியிருக்கிறது

தன்னை ஒரு வல்லரசு நாடாக நினைக்கும் ஒரு அரசு , தன்னை ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக அங்கீகரிக்கவேண்டும் என்று போர்க்கொடி பிடிக்கும் ஒரு அரசு ஏன் ஐ.நா சுகாதாரத்துறை தொகுப்பை கூட வியாபாரம் செய்ய வேண்டும் ? Nauru போன்ற தொற்று இல்லாத நாடுகளுக்கு 10,000 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கிய மோடி ஐ.நா விற்கு வியாபாரம் செய்ய ஒப்புக்கொண்டார் என்பதை மோடி மட்டுமே விளக்க வேண்டும்

இந்த முறைக்கேடுகள் ஏதோ ஒரு சிறு தவறு என்று ஒதுக்கிவிட இயலாது

இந்த முறைக்கேடு பல நிலைகளில் பல வகைகளில் ஒரு பெரும் குற்றமாகவே பார்க்கப்படவேண்டும்  எந்த கோணங்களில் பார்த்தாலும் மோடியின் இமாலய தவறு விளங்கும் இருந்தும் தேசிய காட்சி ஊடகங்கள் பேசாமல் மௌனம் காப்பது இங்கு நடந்திருக்கும் மிகப்பெரிய ஊழலை உறுதி செய்கிறது

இதன் ஒரு தொடர்ச்சியே Brazil நாட்டில் அதன் அதிபர் இந்த வர்த்தகத்தில் ஒரு Singapore நிறுவனம் இடைத்தரகராக பணம் பெற்றது என்று சொல்லியிருப்பது ஒரு மிகப்பெரிய பூகம்பமாய் மாறியிருக்க வேண்டிய நாட்டில் நாம் காங்கிரஸ் கட்சி மீதும் ராகுல் காந்தி மீதும் ஸ்டாலின் மீதும் PTR மீதும் குற்றம் சுமதிக்கொண்டிருக்கிறோம்

Brazil நாட்டிற்கு Bharat Biotech நிறுவனத்திடம் வர்த்தக ஒப்பந்தம் மோடியும் போல்சொனரோவும் நேரிடையாக பேசி உறுதி செய்த நிலையில் ஏன் Singapore நிறுவனத்திற்கு இடைதரகு பணம் செலுத்தப்பட்டது?

2 கோடி தடுப்பூசிகள் Bharat Biotech நிறுவனத்திடம் வாங்கும் நிலையில் January மாதம் 20 லட்சம் தடுப்பூசிகளும் February மாதம் 20 லட்சம் தடுப்பூசிகளும் எந்த தொகுப்பில் இருந்து வழங்கப்பட்டது? இதுவும் $15 என்ற விலையில் விற்கப்பட்டதா ? இந்த அதிக விலை லாபம் தான் Singapore நிறுவனத்திற்கு லஞ்சமாக செலுத்தப்பட்டதா?

நாடாளுமன்றம் கூட்டப்படும் நிலையில் ராகுல் காந்தியும் காங்கிரஸ் உறுப்பினர்களும் மற்றும் இதர எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது

வர்த்தக வியாபாரம் யார் செய்தது? Serum நிறுவனமா? இல்லை இடைதரகர் நிறுவனங்களா? $3 க்கு தான் வர்த்தகம் நடந்ததா? இல்லை அதற்கும் அதிகமாக நடந்ததா?

COVAX-AMC பங்கீட்டில் தடுப்பூசி போகாத நிலையில் அந்த ஒப்பந்த விதிப்படி பெறப்பட்ட பணம் திருப்பி தந்ததா Serum நிறுவனம் ?

எப்படி பார்த்தாலும் ஒரே ஒப்பந்தத்திற்கு இரண்டு முறை பணம் வரவு வைத்திருக்கிறது Serum நிறுவனம் என்ற கேள்விக்கு யார் விடை அளிப்பார்கள் ?

என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் தார்மீக பொறுப்பு மோடிக்கு இருக்கிறது என்பதை அந்த நபர் உணர்ந்தாரா என்று தெரியவில்லை

இந்த ஆராய்ச்சி கட்டுரையின் தொடர்பாக GAVI நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேவிகளுக்கு பதில் வரவில்லை. வரும் நாட்களில் பதில் வரும் நிலையில் இந்த கட்டுரை மேலும் விரிவு செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி :

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 1

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 2

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 3

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 4

குறிப்பு :

https://www.mea.gov.in/vaccine-supply.htm

Write-up, Data Research & Fact checking  By: Shankar Venugopal