சேலம்:
நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்திற்கு வர வேண்டிய தடுப்பூசிகள் வந்து சேராததால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால் நாளை அனைத்து மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.