சென்னை

மதிமுக பொதுச் செயலருக்கு தோளில் பொருத்தப்பட்டிருந்த பிளேட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றபட்டுள்ளது.

கடந்த மே மாதம் 25 ஆம் தேதி  ம .தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கன்னியாகுமரியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக நெல்லை மாவட்டத்துக்கு சென்றார். அவர் அங்கு வீட்டின், திண்ணையில் ஏறும்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில்  அவரின் தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவரில்லி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது.  மேலும் அதே மாதம் அறுவை சிகிச்சை செய்து தோளில், ‘டைட்டானியம் பிளேட்’ பொருத்தப்பட்டது.

வைகோ தனது தோளில் பொருத்தப்பட்ட ‘டைட்டானியம் பிளேட்’ அகற்றுவதற்காக வைகோ நேற்று முன்தினம் இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிளேட் அகற்றப்பட்டு அவர் வீடு திரும்பினார்.

[youtube-feed feed=1]