சென்னை: தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு வாங்கியிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, . ‘பிரவோக்’  என்ற ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  பத்திரிகையாளர் சந்திப்பிலோ, கூட்டங்களிலோ இதுவரை பேசா சசிகலா அளித்த முதல் பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேட்டிக்காக நான்கு மாதங்களுக்கு முன்பு சசிகலாவை அணுகியதாக, இப்பத்திரிகையின் ஆசிரியர் அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார்.  மேலும்,
“பேட்டியின் போது சசிகலா மனம் திறந்து பேசினார். அனைத்து கேள்விகளக்கும் தயக்கம் இல்லாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் சசிகலா பதில் அளித்தார்.
அரசியல் இல்லாமல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையிலான நட்பு குறித்து மட்டுமே பேட்டி எடுக்க வேண்டும் என்ற நினைத்திருந்தேன். ஆனால் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளையும் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது
ஒரு கேள்விக்கு சசிகலா, “கட்சி பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், அக்கா (ஜெயலலிதா) உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு பெற்றிருக்க முடியும். ஆனால், தற்போது வரை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் இருக்கிறேன்” என்று கூறினார்.
ஜெயலலிதாவுக்கு சசிகலா அறிமுகமாகும் முன்பு, ஒரு தமிழ் வார இதழில் சசிகலாவின் நேர்காணல், விளையாட்டிற்கு வருகிறது வீடியோ என்ற தலைப்பில் வெளியானது. அதன்பிறகு இப்போதுதான் ‘பிரவோக்’ என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு சசிகலா பேட்டி அளித்துள்ளார்.