ரோடு

க்களின் நலனுக்காக தி மு க வுடன் கூட்டு வைப்பதில் தவறொன்றும் இல்லை என தினகரன் உறவினரான திவாகரன் ஒரு திருமண விழாவில் கூறி உள்ளார்.

திமுக வில் ஊழல் அதிகமாகி விட்டது என எதிர்ப்பு தெரிவித்த எம் ஜி ஆரால் ஆரம்பிக்கப் பட்ட கட்சி அதிமுக.   இறக்கும் வரை அவர் திமுக எதிர்ப்பை கை விடவில்லை.   அவருக்குப் பின் கட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவும் திமுக எதிர்ப்பை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வந்தார்.  அவருடைய ஜெயா டிவியில் திமுக வை முன்பு மைனாரிட்டி திமுக அரசு என குறிப்பிட்டு வந்தது.   சசிகலாவும் பன்னீர்செல்வம் ஸ்டாலினிடம் சிரித்துப் பேசியதை விமர்சித்துள்ளார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் கட்சி மூன்று அணிகளாக பிரிந்தது.

தற்போது எடப்பாடி அணியும், ஓ பி எஸ் அணியும் ஒன்று சேர்ந்ததை தினகரன் அணி எதிர்த்து வருகிறது.  கவர்னரிடம் எடப்பாடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தினகரன் அணி மனுவும் அளித்தது.   திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்துள்ளது.

திமுக வின் செயல் தலைவரான மு க ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களிடம் ”சில நாளில் நிச்சயம் அரசியல் மாற்றம் வரும், பொறுத்திருங்கள்,  நான் சில வருடங்கள், மாதங்கள் என சொல்லவில்லை,  சில நாட்கள் மட்டுமே” என கூறி இருந்தார்.  அதையொட்டி அரசியல் நோக்கர்கள் பலரும், இந்த அரசை நீக்கி தினகரன் அணியை திமுக பதவியில் அமர்த்தும் எனவும்,  தங்களுக்கு முழு பெரும்பான்மை இல்லாததால் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் எனவும் கூறி வந்தனர்.

ஈரோட்டில் நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய திவாகரன், “மக்களின் நலனுக்காக திமுக உடன் கூட்டணி வைப்பதில் தவறேதும் இல்லை.  இதுவரை எங்களுக்கு 40 எம் எல் ஏக்களின் ஆதரவு உள்ளது,  திமுக அணியில் உள்ள 89 எம் எல் ஏக்களுடன் இணைந்து நாங்கள் இந்த அராஜக ஆட்சியை ஒழிக்க உள்ளோம்.  திமுக தங்களிடம் பெரும்பான்மை இல்லாததாதால் ஆட்சியை அமைக்காது என்பது தெரிந்ததே.  அதனால் அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவதை ஏற்றால் எந்தத் தவறும் இல்லை.” என கூறி உள்ளார்.

இந்தக் கருத்தைக் கூறிய திவாகரன், அதிமுக வின் சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்பதும் தினகரனின் குடும்ப உறுப்பினர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  அவர் அதிமுக வின் அடிப்படை உறுப்பினரே இல்லை எனவும் சிலர் கூறுகின்றனர்.